மீத்தேன் மறுவடிவம் ஷேல் எரிவாயு
பூமிக்குள் குறைந்த
ஆழத்தில் இருந்து
எடுத்து பயன்படுத்தும்
இயற்கை எரிவாயு,
1500 அடி ஆழத்தில்
எடுக்கப்படும் மீத்தேன் வாயு போன்று 7 ஆயிரம்
முதல் 10 ஆயிரம்
அடி ஆழத்தில்
களிமப் பகுதில்
உரைந்து கிடக்கும்
எரிவாயுதான் ஷேல். இயற்கை எரிவாயுக்கள் (Compressed Natural Gas, CNG) என்பது பெட்ரோல்,
டீசல், எல்.பி.ஜி போன்றவற்றிற்கு மாற்றாக
பயன் படுத்தப்படும்
புதைபடிவ எரிமங்களுள்
ஒன்று ஷேல்
எரிவாயு.
இயற்கை எரிவாயுக்கள்
அனைத்தும் பூமிக்குள்
பாறை உடைப்புகளில்
தேங்கி இருப்பவற்றை
வெளியே கொண்டு
வருவது. ஆனால்
ஷேல் எரி
வாயு அப்படி
அல்ல களிமப்
பகுதியில் இருக்கும்
பாறைகளை செயற்கை
முறையில் உடைத்து
பிளவுகளை உண்டாக்கி,
அதில் இருந்து
பெறப்பட வேண்டும்.
இதற்கு அதி
நவீன தொழில்
நுட்பங்கள் பயன்படுத்தப் படுகிறது. மீத்தேன் எரிவாயுவை
எடுக்க எத்தகைய
ஃபிராக்சரிங் முறை பயனபடுத்தப் படுகிறதோ அதே
தொழில் நுட்பம்தான்
,ஷேல் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும்
என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உலகில் 38 நாடுகளில்
ஷேல் எரிவாயு
இருப்பது கண்டறியபபட்டு
உள்ளது. அமெரிக்காவில்
அலாஸ்கா பகுதியிலும்,
ரஷ்யாவி்ல் சைபீரியா பகுதியிலும் பெருமளவு ஷேல்
எரிவாயு இருப்பது
கண்டறியப்பட்டு இருக்கிறது. வட அமெரிக்காவில், ஷேல்
எரிவாயு உற்பத்தி
2020க்குள் மொத்த எரிவாயு உற்பத்தியில் 50 சதமாக
இருக்கும் என்கிறார்கள்.
ஏனைய நாடுகளுடன்
ஒப்பிடும்போது இந்தியாவில் ஷேல் எரிவாயு மிகக்
குறைவாகவே உள்ளது.
(உலக படத்தை
பார்க்கவும்) குஜராத்தின் காம்பே வளைகுடா, கிருஷ்ணா-கோதாவரி, காவேரி,
தாமோதர் பள்ளத்தாக்கு
பகுதிகளில் ஷேல் எரிவாயு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
எனினும் இப்பகுதிகள்
அனைத்தும் மக்கள்
தொகை மிகுந்த,
வேளாண்மை சிறந்து
விளங்கும் பகுதிகள்
ஆகும்.
அமெரிக்காவில் மக்கள்
தொகை அதிகம்
இல்லாத பகுதிகளில்
மட்டுமே தற்போது
ஷேல் எரிவாயு
எடுக்கப் படுகிறதாம்.
இந்தியாவில் சொந்தக் காலில் நின்று ஷேல்
எரிவாயுவை எடுத்து
நாட்டு வளர்ச்சிக்குப்
பயன்படுத்தும் திறன் ஓ.என்.ஜி.சி, கெயில்
போன்ற இந்திய
அரசு நிறுவனங்களுக்கு
இல்லை. அவை
வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.
இந்தியாவின் மொத்த
தேவையில் உள்நாட்டு
குரூட்ஆயில் உற்பத்தி சுமார் 25 சதமாக இருக்கிறதோ,
அதுபோலவே ,ஷேல்
போன்ற எரிவாயுக்களின்
உற்பத்தியும் மிகக்குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த உற்பத்தியும்
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமே மேற்கொள்ள முடியும்.
அந்த நிறுவனங்கள்
லாபத்தையே குறிக்கோளாகக்
கொண்டு செயல்படும்போது,
இந்தியாவுக்கு எந்த வகையில் பயன் அளிக்க
முடியும் என்பதையும்
எண்ணிப் பார்க்க
வேண்டும்.
ஷேல் எரிவாயுவால்
சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் இல்லை என்றும்
கூறிவிட முடியாது.
நிலக்கரியைப பயன்படுத்துவதைவிட சற்று குறைவாக இருக்கலாம்.
ஆனால் 7 ஆயிரம்
முதல் 10 ஆயிரம்
அடி ஆழத்தில்
இருந்து , ஷேல்
எரிவாயு எடுக்கும்
முயற்சியில், காவிரி டெல்டா உள்ளிட்ட மக்கள்
தொகை நெருக்கம்
நிறைந்த பகுதியில்
சுற்றுச்சூழல் மாசு படாது என்பதற்கும் வேளாண்மை
பாதிக்கப்படாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
நிலத்தின்கீழ் என்ன
கிடைத்தாலும் அது நில உரிமையாளருக்கே சொந்தம்
என்பதுதான் அமெரிக்காவின் சட்டம். எனவே அங்கு
தனியார் நிறுவனங்கள்,
நில உடைமையாளர்களிடம்
அவர்கள் எதிர்பார்க்கும்
பணத்தைக் கொடுத்து
நிலத்தை வாங்குவார்கள்.
நல்ல விலை
கிடைத்தால் நிலத்தை விற்கப் பலரும் முன்வருவார்கள்.
ஆனால் இந்தியாவில்
அப்படி அல்ல
நிலத்துக்கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் அரசுக்கே
சொந்தம். என்
வீட்டின் அடியில்
உள்ள நிலத்தில்
வைரம் கிடைக்கிறது
என்று தெரிந்தால்,
அரசு எனக்கு
ஏதோ கொஞ்சம்
பணத்தைக் கொடுத்து
விட்டு, நிலத்தை
எடுத்துக் கொண்டு
துரத்திவிடும். அதுவும் வர இருக்கும் நிலம்
கையகப் படுத்தும்
சட்டத்தின் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் நிலஉரிமையாளர்களை
துரத்திவிட முடியும். நீதிமன்றம்கூட செல்ல முடியாது.
எனவே காவிரி்
டெல்டா பகுதியில்
ஷேல் எரிவாயு
எடுப்பது என்பது,
போராட்டங்களால் விரட்டப்பட்ட மீத்தேன் எரிவாயுத் திட்டத்தின்
மறுவடிவமாகத்தான் இருக்கமுடியும். ஏற்கனவே எண்ணை எரிவாயு
துரப்பணக் கருவிகளால்
சீர்குலைந்து விட்ட டெல்டா நிலங்கள் மீண்டும்
ஒரு அழிவைச்
சந்திக்க தயாராக
இருக்க வேண்டும்
என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்து.
அப்படியே வலுக்கட்டாயமாக
மக்களை மிரட்டி
ஷேல் எரிவாயு
உற்பத்தி செய்தாலும்
அது 10 ஆண்டுகளுக்குள்
முடிவடைந்து (அமெரிக்காவில் ஷேல் எரிவாயு 100 ஆண்டுகளுக்கு
கிடைக்கும் என்று தெரிவித்தாலும், 11 ஆண்டுகளுக்கு கிடைப்பதையே
விஞ்ஞானிகள் உறுதி செய்து இருக்கிறார்களாம்) டெல்டா
மாவட்டங்கள் தரிசு நிலங்களாக, சுடுகாடாகத்தாதன் காட்சி அளிக்கும் என்பதில் சந்தேகம்
இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக