திங்கள், 6 ஜூலை, 2015

புரதச் சத்தும் பன்னாட்டு அரசியலும்

   புரதச் சத்தும் பன்னாட்டு அரசியலும்
                                                          த.தேவராஜ்
  கடலூர்:
    மனித உடல் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் தேவையான ஊட்டச் சத்துகளில் முதன்மையானது புரதம். சமச்சீர் உணவுப் பட்டியலில் முதலிடம் புரதத்திற்கேஉடலின் திசுக்கள் அழியாமல் தடுக்கவும், அழிந்த திசுக்களைப் புதுப்பிக்கவும் புரதம் உதவுகிறது.
   சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு பால், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள் முந்திரிப் பருப்பு, நிலக் கடலை, சோயாபீன் மூலம் புரதம் கிடைக்கிறது. அசைவ பழக்கம் உள்ளவர்களுக்கு மீன், முட்டை மற்றும்  இறைச்சியில் தரமான புரதம் உள்ளதுமனித உடலுக்கு அத்தியாவசிய தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீனில் மட்டுமே உள்ளது.
   57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயது ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம். 50 கிலோ எடை, அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு நாளொன்றுக்கு 63 கிராம் புரதம் தேவைகர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவை. பாலூட்டும் காலங்களில் பெண்களுக்கு நாளொன்றுக்கு 75 கிராம் புரதம் தேவை. உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.8 கிராம் வரை மனித வளர்ச்சிக்கு புரதம் தேவை
 அனைத்து உணவுப் பொருள்களையும் ஒப்பிடுகையில், குறைந்த விலையில் அதிக புரதச் சத்து கிடைப்பது மீன்களில்தான். 100 கிராம் மீனில் 30 கிராம் வரையும், ஒரு முட்டையில் 6 கிராம் புரதமும் உள்ளது. பருப்பில் 27 சதம், தானியங்களில் 12 சதம் புரதம் உள்ளது
   கடல் உணவுப் பொருள்கள் இதயத்தை பாதுகாக்க வல்லது என பல   ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவோருக்கு மாரடைப்பு பாதிப்பு பாதியாக குறைகிறது. மாதம் 3 முறை மீன் சாப்பிட்டால்  இதயத்திற்கு, சிக்கல் வராதுமாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
   சைவ உணவாளர்களின் புரதச்சத்தை நிறைவு செய்யும் பருப்பையும் தானியங்களையும் உற்பத்தி செய்யும் வேளாண் தொழிலையும், வேளாண் உற்பத்தியையும் இந்தியாவில் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரால் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் லாப வெறியால் இந்திய விவசாயம் அழிந்து வருகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம், குறைந்த நிலத்தில் நிறைய வேளாண் பொருள்களை உற்பத்தி செய்துகொள் என்று ஆலோசனை தருகின்றன, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் உலக கார்பரேட் நிறுவனங்கள்.
  உலக பணக்காரர்களின் லாப வெறிக்கு இந்திய மக்களை பலிவாங்க வேண்டும் என்பதே அந்த நிறுவனங்களின் குறிக்கோள். இந்திய மக்கள் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பயறு வகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அந்த விதைகளை விற்று பணம் சம்பாதிக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறைந்த செலவில் கிடைக்கும்  மீன் மற்றும் இறைச்சி புரதங்களை கிடைக்காமல் செய்து விடுவதின் மூலமும் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பதன் மூலமும், அந்நிறுவனங்கள் தங்கள் திட்டத்தை மறைமுகமாக நிறைவேற்றத் துடிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.
  இயற்கை தந்த கொடை நமது நாட்டின் கடற்கரையும் கடல் மீன்களும்மீனைத் தவிர ஏனைய புரதப் பொருள்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய, பெருமளவு செலவிடவும் போராடவும் வேண்டியது இருக்கிறது. அதில் உலக உணவு வணிகர்களின் லாப வெறியும் அரசியலும் புதைந்து கிடக்கிறது.
  இந்தியா 8,118 கி.மீ நீளமும், தமிழகம் 1,076 கி.மீ. நீளமும் கடற்கரை கொண்டது. கடல் மீன்பிடித்தல் மட்டுமன்று நீர்நிலைகளில் மீன் பிடித்தலும் உள்ளது. இந்தியாவில் 1.5 கோடி மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். உலகில் இந்தியா மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது. ஆண்டிற்குமில்லியன் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியாகிறது. ரூ. 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிறது
  குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கை தரும் மீன்களைக் கிடைக்காமல் செய்தல், உணவு உற்பத்தியை, அவற்றை சேமித்து வைத்தல் போன்றவற்றை கேள்விக் குறியாக்குவதன்  மூலம் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்கள், இந்தியாவை அடிமைப் படுத்தி விடலாம் எனத் திட்டமிடுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.   
   உலக வர்த்தக அமைப்பின் மூலம் இந்திய வேளாண் விளைபொருள்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை திணிக்க முயல்வதும், நமது மீனவர்கள் மீன்பிடிக்க முடியாதவாறு, பல்வேறு இடையூறுகளை இலங்கை போன்ற நாடுகள் மூலம் நுழைப்பதும் லாபவெறி கொண்ட பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களின் சதித் திட்டங்களாகவே  பார்க்க முடிகிறது.
                                                                                                                                                            

--------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக