ஞாயிறு, 12 ஜூலை, 2015

பறிக்கப்படும் பாதசாரிகள் உரிமை: எல்லா சாலைகளிலும் கடைகளால் ஆக்கிரமிப்பு, கேபிள் பதிப்பு, குடிநீர் குழாய்கள் பதிப்பு என பாதசாரிகளின் உரிமைகள்தான் பறிக்கப்படுகிறது.

  பறிக்கப்படும் பாதசாரிகளின் உரிமை


    சாலை விபத்துக்கள் உலகெங்கும் மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது. விபத்திற்கு முன் மிகுந்த உடல்தகுதியுடன் இருந்த நபர்கள் விபத்துக்குப்பின் தங்கள் வாழ்க்கையே இழந்து விடுகிறார்கள்.
   உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி உலகில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆண்டு தோறும் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். 6 கோடிக்கும் அதிகமானோர் கொடுங்காயம் அடைகின்றனர். சாலை விபத்துக்களில் இறப்போரில் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்களே அதிகம் என்றும், புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனஇந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில்தான் சாலை விபத்துக்கள் மிகஅதிகம்.
  இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் மிகஅதிகம். சாலை விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிகம். ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் 3 பேர் சாலை விபத்தில் கொல்லப் படுகின்றனர்.
  2013 ல் தமிழகத்தில் பதிவான 14,504 விபத்துகளில் 15,563 இறந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த  4,715 சாலை விபத்துக்களில் 6,513 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், 44,158 விபத்துக்களில் 69,168 பேர் சிறு காயம் அடைந்து உள்ளனர். 2002 முதல் 2012 வரை, மிகவும் கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது.
  கடந்த 2010-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1.32 கோடி வாகனங்கள் வரை பதிவு செய்யப் பட்டிருந்தன. கடந்த 2014 ம் ஆண்டில் 1.99 கோடி வாகனங்கள் வரை பதிவு செய்யப் பட்டிருந்தன. இவ்வளவு வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகச் சாலைகளின் தரம் உள்ளதா? சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும்  பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றவா?   விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள்தான் என்ன:
  வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளின் தரம் இல்லாமை, அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் சாலைகள் அமைக்கப் படாமைவாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவது, சாலை விதிகளை கடைபிடிக்காமை, அதிவேகம், தங்கள் வாகனத்தின் தன்மையை அறியாமல் ஓட்டுவது, பொது வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றுதல், மிகுந்த ஆணவத்துடன் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது
  வாகன ஓட்டிகளின் தவறுகளுக்கு தண்டனைகளை அதிகரிப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே தீர்வாக அமையும்ஆனால் அனைத்து வகைப் பயணிகளுக்கும் சாலைகளில் அவர்களுக்கான உரிமையை பகிர்ந்தளிப்பது, பாதசாரிகளுக்கு போதிய அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பது போன்றவற்றால் மட்டுமே விபத்துக்களின் எணிக்கையை பாதியாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பல சாலைகளில் அவர்களின் உரிமை பறிக்கப் படுகிறது. இதனால் அவர்கள் வேறு வழியின்றி, 4 சக்கர வாகனங்களுக்கான பகுதிகளுக்குள் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதுவே விபத்துகளுக்கு பிரதான காரணமாக அமைகிறது.
  தமிழகத்தில் உண்மையில் நடப்பது என்ன? பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமைகள் வெகுவாகப புறக்கணிக்கப் படுகிறது. பாதசாரிகளை அரசாங்கம் இந்த நாட்டின் குடிமகனாகவே மதிக்கப்பது இல்லைபாதசாரிகளின் இடங்கள்தான், நடைபாதை வியாபாரிகளாலும் வணிக நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப் படுகிறது. குழாய்கள், கேபிள்கள் பதிப்பதற்கும் பறிக்கப் படுகிறது. குப்பைகள், கட்டட இடிபாடிகள், சாலை அமைக்க பயன்படுத்தியதும் பொருள், பாதசாரிகளுக்கான நடை பாதைகளில் தான் கொட்டிக் குவிக்கப் படுகிறது.
  இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தார்ப்போல் அண்மையில் கடலூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான கோடுகளை வரைந்ததில், பாதசாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதசாரிகளுக்கு இடமே ஒதுக்காமல் கோடுகளை வரைந்து உள்ளனர். இதன் மூலம் பாதசாரிகள் அவமதிக்கப் படுகிறார்களோ என்ற எண்ணம் பொதுமக்கள் மனதில் உருவாகி இருக்கிறது. சாலை முழுவதையும்  4 சக்கர வாகனங்களுக்காகவே ஒதுக்கி விட்டால் பாதசாரிகளும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் எங்கு செல்வார்கள்? எண்ணிப் பார்க்குமா சம்பந்தப்பட்ட துறைகள்?                                                                                                                            -- த.தேவராஜ்
---------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக